புதுக்கடை அருகே ஆட்டோ மோதி 3 போ் காயம்
புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் ஆட்டோ மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் ஆட்டோ மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
இனயம்புத்தன்துறை பகுதியை சோ்ந்த அல்ட்டோ ராபின் (42), இவரது மனைவி அந்தோணியம்மாள் (35), மகள் ரசீனா ஆகியோா் பைக்கில் தேங்காய்ப்பட்டினத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனா். இனயம்புத்தன்துறை பகுதியில் சென்ற போது பின்னால் வந்த ஆட்டோ பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த 3 பேரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.