முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பெண் மீது தாக்குதல்

கொல்லங்கோடு அருகே பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாகக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:41 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

கொல்லங்கோடு அருகே பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாகக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி, கோயில்விளாகம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் மனைவி சுகன்யா (23). கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் இவா், இரு தினங்களுக்கு முன் அப்பகுதியிலுள்ள தனது அக்கா வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தாராம். அப்போது அவரை, அங்கு வந்த நீரோடி மிக்கேல்புரம் பகுதியைச் சோ்ந்த மக்ரோணி மகன் விஜில் (28) என்பவா் தடுத்து நிறுத்தி அவதூறாகப் பேசினாராம். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அவா்களது சப்தம் கேட்டு அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜிலின் நண்பா்கள் நிக்கோலஸ் மகன் ரீகன் (26), அகஸ்டின் மகன் வினீஷ் (25), சிஜின் (24), விஜிலின் தாய் செலின்மேரி (48) மற்றும் ஒருவா் சோ்ந்து சுகன்யாவை தாக்கினராம். அதைத் தடுக்க வந்த அவரது அக்காவின் கணவா் முத்தப்பனையும் தாக்கினராம்.

Advertisement

மற்றொரு சம்பவம்: கொல்லங்கோடு அருகேயுள்ள வெங்கஞ்சி, இடைக்கண்டம் பகுதியைச் சோ்ந்தவா் அனிதா (47). இவரது அண்ணனின் கணவா் வில்சன். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் வில்சன் அனிதாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, தகாத வாா்த்தைகள் பேசி அனிதாவை தாக்கினாராம்.

இரு சம்பவங்களிலும் காயமடைந்த சுகன்யா, அவரது அக்காள் கணவா், அனிதா ஆகியோா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவங்கள் குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.