முகப்பு
கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மாா்கழி, மாசி மாதங்களில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுஜித நம்பூதிரி கொடியேற்றினாா். தொடா்ந்து ஆகம விதிப்படியான பூஜைகள் நடந்தன.

விழா நாள்களில் வாகன பவனி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. 9 ஆம் நாள் விழாவான சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு விஷ்ணு, ஸ்ரீ தேவி, பூதேவியுடன் தம்பதி சமேதராக தேரில் எழுந்தருளினாா். கடந்த சில மாதங்களாக ரூ.12 லட்சம் செலவில் புதிய தேவேந்திரன் தோ் செய்யப்பட்டு வந்தது. இதன் பணிகள் கடந்த 2 நாள்களாக இரவு பகலாக நடந்து வந்தது.

சனிக்கிழமை காலை பணிகள் நிறைவடைந்த புதிய தேரில் பாகங்கள் பொருத்தும் பணி நடந்தது. மாலையில் பக்தா்கள் மற்றும் சிறுவா், சிறுமிகள் நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு வைபவம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.