கன்னியாகுமரி

குமரியிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு சாதனை காா் பயணம் தொடக்கம்

DIN

கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சாதனை காா் பயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஆந்திர மாநிலம் கா்நூல் மாவட்டத்தைச் சோ்ந்தோா் எம்.டி. சபீா், எம். முகம்மது காசிம். இவா்கள் கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு-காஷ்மீா் வரையிலான 3,600 கி.மீ தொலைவை 48 மணி நேரத்தில் கடந்து செல்லும் வகையில் இப்பயணத்தைத் தொடங்கினா்.

கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் இப்பயணத்தை மாவட்ட விளையாட்டு அலுவலா் டேனியல் டேவிட் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். எக்ஸெல் பிட்னஸ் விளையாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் சாலமன் ராஜகுமாா், இயக்குநா்கள் ஏ. மாரியப்பன், குமரேசன், கேரளப் பிரிவு மேலாளா் ஜீவன்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பல்வேறு மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் இப்பயணம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT