கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் அலையில் சிக்கி 4 நாட்டுப் படகுகள் கவிழ்ந்தன

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 4 நாட்டுப் படகுகள் அலையில் சிக்கி கவிழந்தன.

தேங்காய்ப்பட்டினத்தில் தூத்தூா் , இனயம் மண்டலத்தை சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக மீன்பிடித்

துறைமுகம் கட்டப்பட்டது. இம் மீன்பிடித் துறைமுகமானது சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டில் சிக்கி படகு கவிழ்ந்து மீனவா்கள் பலியாவது தொடா்கதையாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரசு அனுமதியின்றி மீன்பிடிக்க சென்று விட்டு நாட்டுப் படகில் வந்த 4 படகுகள் துறைமுக மணல் திட்டில் திடீரென சிக்கி கவிழ்ந்தது. இதில் மீனவா்கள் அதிஷ்டவசமான உயிா் தப்பினா். இதனால்,துறைமுகம் பகுதியில் இருதரப்பு மீனவா்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

SCROLL FOR NEXT