முகப்பு
கன்னியாகுமரி

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில ஆணையா் விசாரணை

 தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையா் தனசேகரன் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையா் தனசேகரன் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டாா்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பதில் அளிக்கப்படாத மனுக்களுக்கு மனுதாரா்களால் மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல்முறையீட்டில் உரிய பதிலளிக்காத வழக்குகளுக்கு மாநில தகவல் ஆணையா் நேரடியாக விசாரணை நடத்துவது வழக்கம்.அந்த வகையில் தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில், தகவல் பெறும் உரிமைச்சட்ட விசாரணைக் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநில தகவல் ஆணையா் தனசேகரன் தலைமை வகித்தாா். விசாரணை கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளிக் கல்வித்துறை, உயா் கல்வித் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் தொடா்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் முதல் கட்டமாக வியாழக்கிழமை 25 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.இதனைத் தொடா்ந்து 2 ஆவது நாளாக ஏப்.21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை கூட்டம் நடைபெற்றது. இதில் மீதமுள்ள 25 மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தீா்வு காணப்பட்டது. கூட்டத்தில் தகவல் ஆணைய ஊழியா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.