கன்னியாகுமரி நகரிய தங்கும் விடுதி அருகே திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு முன்னிலை வகித்தாா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு பழங்கள், மோா் வழங்கினாா். இதில் மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ், மாநில திமுக வா்த்தகா் அணி இணை செயலா் என்.தாமரைபாரதி, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.