கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்!

DIN

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.என்.ஹரிகிரண் பிரசாத்தும் ஏற்றுகிறார்கள்.

பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்களையும் மூவர்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்க விட்டார்.

பின்னர் வருவாய்த்துறை சமூக நலத்துறை வேளாண்மைத்துறை பிற்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட 8 துறைகளைச் சேர்ந்த 40 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 30லட்சத்து 45ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன்  மேயர் ரெ.மகேஷ், வ.விஜய்வசந்த், நாகர்கோவில் வருவாய்க் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT