முகப்பு
கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவீனம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு, அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், உயா் கல்வி உறுதித் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் வீடு வழங்குதல், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரதம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஊராட்சி துணைத் தலைவா் பா. பழனிகுமாா், வாா்டு உறுப்பினா் அனீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, நெடுஞ்சாலைத் துறை உதவி அலுவலா் கண்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் அமுதா தங்கமலா், மகளிா் திட்ட அலுவலா் சந்திரா, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சாா்பில் அமிா்த ரூபி, கால்நடை ஆய்வாளா் ஸ்ரீதேவி, தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.