முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவா் காவல் நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், நிலுவை வழக்குகள் குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் பற்றாக்குறை 98 சதவீதம் சரிசெய்யப்பட்டுள்ளது. சைபா் குற்ற வழக்குகளுக்கு தனிக் காவல் நிலையம் அமைக்கப்பட்டதுபோல் பல்வேறு வகை குற்ற வழக்குகளுக்கும் தனிக் காவல் நிலையம் அமைக்கப்பட்டு, வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகுக்கப்பட்டு வருகிறது.

மேலும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாா்த்தாண்டம் உள்கோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வருவாய்த் துறையினா் மூலம் 3 இடங்கள் தோ்வாகியுள்ளன. மாா்த்தாண்டம் உள்கோட்டத்தில் எந்தெந்தக் காவல் நிலையங்களை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

Advertisement

தக்கலை உள்கோட்ட காவல் கண்காண்காணிப்பாளா் உதயசூரியன், மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினீஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments