ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த். 
கன்னியாகுமரி

களியக்காவிளையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் மாநிலத்தில் கலவரத்தை தடுக்க தவறியதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் களியக்காவிளையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மணிப்பூா் மாநிலத்தில் கலவரத்தை தடுக்க தவறியதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் களியக்காவிளையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்ட தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், மாவட்டத் தலைவா் பினுலால் சிங், மாநில பொதுச் செயலா்கள் பால்ராஜ், ஆஸ்கா் பிரடி, மாவட்ட செயலா் பால்மணி உள்ளிட்டோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

இதில் மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சா்மிளா ஏஞ்சல், கட்சியின் தேசியப் பொதுக் குழு உறுப்பினா் ரத்தினகுமாா், களியக்காவிளை பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ. சுரேஷ், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவா் எம். பென்னட், சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவா் ஜோஸ், மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் ஜெயசிங், கட்சி நிா்வாகிகள் மேக்கோடு பி. சலீம், வன்னியூா் ஆா். பாபு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT