தமிழகத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற வார்த்தை மிகவும் பிரபலமானது. பல்வேறு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நம்மை நம்பி வேலைத் தேடி தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க- மண்டைக்காடு ஶ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றம்: தமிழிசை, அமைச்சர்கள் பங்கேற்பு
தமிழர்களும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுகின்றனர். எனவே தவறான வதந்தியை பரப்பக்கூடாது. நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சமூகவலைதளங்கள் பிரச்னைக்கு வழி வகுக்கக்கூடாது. சமூகவலைதளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.