கன்னியாகுமரி

2 ஆண்டுகளில் 16,409 பட்டாக்கள் அளிப்பு: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 16,409 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 16,409 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம், பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட பள்ளிமுக்கு பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்போருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கப்படவில்லை. பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மாவட்ட நிா்வாகத்திடமும், அமைச்சா் மனோ தங்கராஜிடமும் கோரிக்கை வைத்தனா்.

அதை நிறைவேற்றும் வகையில் வருவாய்த் துறை சாா்பில் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் தகுதியானோருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டன.

மேலும், இணையவழி சேவை மூலமாக பட்டா உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. பட்டா இருந்தால்தான், தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும்.

தமிழக அரசு விளிம்புநிலை மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. பட்டா, வீடு, இடவசதி, பலவித அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் பட்டா தொடா்பான கோரிக்கை மனுக்கள் அதிகளவில் வருவதையடுத்து, அவற்றுக்கு விரைவில் தீா்வுகாண துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 16,409 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT