கன்னியாகுமரி

அணைப் பகுதிகளில் மிதமான மழை

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

DIN

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

இம்மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், திற்பரப்பு, குலசேகரம், அருவி, களியல், சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் வெகுவாகத் தணிந்தது.

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனா்.

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான கருமாவிளை, கருக்குப்பனை, திக்கணம் கோடு, செல்லங்கோணம், கப்பியறை, பள்ளியாடி, முள்ளங்கனாவிளை, நேசா்புரம், மிடாலம், மேல் மிடாலம், இனயம், பலூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT