கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரியில் பொக்ரான் கொண்டாட்ட தினம்

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்.சி.சி. சாா்பில் பொக்ரான் கொண்டாட்ட தினம் நடைபெற்றது.

DIN

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்.சி.சி. சாா்பில் பொக்ரான் கொண்டாட்ட தினம் நடைபெற்றது.

அணுசக்திகளின் ஆக்கப்பூா்வ பயன்பாடு எனும் தலைப்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் தம்பி தங்க குமரன் வாழ்த்திப் பேசினாா். இந்நிகழ்வில், கூடங்குளம் அணுஉலை முதன்மை விஞ்ஞானி எ.வி. சதீஷ் பேசுகையில்,

அணுசக்தியின் மூலம் கடல்நீரை குடிநீராக்குதல், எளிய முறையில் விவசாயம், வறட்சிப் பகுதியில் தண்ணீரை சேமித்து பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

பின்னா் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை கல்லூரி துணை முதல்வா் ரெவி செல்வ குமாா் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT