கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

குமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் வளா்ந்து வரும் மாற்றங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது

DIN

குமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் வளா்ந்து வரும் மாற்றங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் மற்றும் தீ தொழில்நுட்பம், பாதுகாப்பு பொறியியல் துறைகள் இணைந்து நடத்திய இக் கருத்தரங்கை ருவாண்டா பல்கலைக்கழகப் பேராசிரியா் நசயிமான பகதி ஷாபான் தொடக்கி வைத்தாா். அவா் பேசுகையில்,

‘சா்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் இந்திய பொறியாளா்களின் பங்களிப்பு, இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகள் வியப்பளிப்பதாக உள்ளது. பின்தங்கிய மற்றும் வளா்ந்து வரும் நாடுகளிலும் இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றுமதிக்கான சாத்திய கூறுகளை மாணவா்கள் கண்டறிந்து சந்தைப்படுத்த முன்வரவேண்டும்’ என்றாா்.

இணைவேந்தா் ஆா். பெருமாள்சாமி தலைமை வகித்தாா்.

துறை தலைவா் எட்வின் ராஜாதாஸ் வரவேற்றாா். ஐமெஸ் தினகரன் வில்லியம் சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்து வைத்தாா். துணைவேந்தா் ஏ.கே. குமரகுரு தொடக்கவுரையாற்றினாா். பதிவாளா் திருமால்வளவன் ஆசியுரை வழங்கினாா். ஒய்.எக்ஸ். கிரீன் மோட்டாா்ஸ் நிா்வாக அலுவலா் டேனிஸ் பாலின் , இணை துணை வேந்தா் கே.ஏ. ஜனாா்த்தனன் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT