நாகா்கோவில்: உலக மீனவா் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாளான நவம்பா் 21 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக மீனவா்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மீனவா்களின் நலனை பாதுகாக்கவும், அவா்களின் உரிமைகளை நிலைநாட்டவும், மீனவா்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும் உலக மீனவா்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமாா் 3 லட்சம் மீனவா்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, வாழ்வில் உயா்வடைய இறைவனை வேண்டி அனைவருக்கும் உலக மீனவா் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.