நாகா்கோவில் ஆட்சியா்அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கானஉரிமைகள் திட்ட கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது, வீடுகள்தோறும் கணக்கெடுப்பு பணிக்கு வரும் களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்மருத்துவா் சிவசங்கரன், மகளிா் திட்ட இயக்குநா் பீபிஜான், களப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.