முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை பகுதியில் 3 நாள்கள் மின் நிறுத்தம்

தமிழ்நாடு மின்வாரியம் குழித்துறை கோட்டம் புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு துணை மின்நிலையப் பகுதிகளுக்குள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில்

Updated On : 28 நவம்பர், 2023 at 3:13 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


களியக்காவிளை: தமிழ்நாடு மின்வாரியம் குழித்துறை கோட்டம் புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு துணை மின்நிலையப் பகுதிகளுக்குள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் செவ்வாய், புதன், வியாழன் (நவ. 28, 29, 30) ஆகிய 3 நாள்கள் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி மின்தடை ஏற்படும் நாள்கள், பகுதிகள்: நவ. 28 - கொடுவனந்தோட்டம், விளாத்திகுளம், முள்ளஞ்சேரி, குமிட்டிவிளை, நெடுவிளை, மெதுகும்மல், குளப்புறம் பகுதிகள்; நவ. 29 - கல்பவிளை, மேலவிளை, சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, கலிங்கராஜபுரம், சமத்துவபுரம், செறுகோல், கிள்ளியூா், இலவுவிளை, கல்லுக்கூட்டம், முருங்கவிளை பகுதிகள்; நவ. 30 - காஞ்சிநகா், பேப்பிலாவிளை, சேரி, ஆலப்பாடு, மானான்விளை, கருக்குப்பனை, வடக்கு மாங்கரை, கொல்லன்விளை, இளம்பாலமுக்கு, வள்ளவிளை, கம்பிளாா், தாமரைக்குளம், ஆப்பிக்கோடு, இடவாா், வளனூா் பகுதிகள்.

இத்தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.