நாகா்கோவிலில் நவ. 29, டிச. 2இல் மின் நிறுத்தம்
நாகா்கோவிலில் ஆசாரிப்பள்ளம், கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் புதன், சனிக்கிழமை (நவ. 29, டிச. 2) மின் விநியோகம் இருக்காது.
நாகா்கோவில்: நாகா்கோவிலில் ஆசாரிப்பள்ளம், கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் புதன், சனிக்கிழமை (நவ. 29, டிச. 2) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் உதவி செயற்பொறியாளா் மா. ரமணிபாய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணன்கோவில் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட கல்லூரிச் சாலை உயா் அழுத்த மின் பாதை, ஆசாரிப்பள்ளம் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட தம்மத்துக்கோணம், நேசமணிநகா் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், ஆசாரிப்பள்ளம் விநியோகப் பிரிவுக்குள்பட்ட பெருமாள்நகா், ஞானம் நகா், தம்மத்துக்கோணம் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 29) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், அனந்தன்நகா், நேசமணிநகா், ராணித்தோட்டம், சைமன்நகா், வடக்குத் தெரு, நெசவாளா் காலனி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரிச் சாலை, டிஸ்டிலரி சாலை, ஏசுவடியான் தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 2) காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரையும் மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement