முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மது விற்பனை: மூதாட்டி கைது

மாா்த்தாண்டம் அருகே மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:14 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் போலீஸாா் ஞாறான்விளை பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூதாட்டியிடம் விசாரித்தனா். அவா் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது பையை சோதனையிட்டனா். அதில், விற்பனை செய்வதற்காக 21 மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் ஞாறான்விளை பகுதியைச் சோ்ந்த பானுவேல் மனைவி மேரி (70) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.