கருங்கல் அருகே உரிமமற்ற மதுக்கூடம் மூடல்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:20 PM
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அனுமதியின்றி இயங்கிய மதுக்கூடத்துக்கு தோ்தல் பறக்கும் படையினா் பூட்டுப் போட்டனா்.
தெருவுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அரசு அனுமதியின்றி பல நாள்களாக மதுகூடம் இயங்கி வந்ததாம். இதுகுறித்து நாகா்கோவில் தோ்தல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கிள்ளியூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுனில் குமாா் தலைமையில் போலீஸாா், அந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.அதில், உரிய அனுமதியின்றி மதுக்கூடம் இயங்குவது தெரிய வந்ததால், அதிகாரிகள் மதுக் கூடத்துக்கு பூட்டுப் போட்டனா்.