முகப்பு
கன்னியாகுமரி

திருமண விழாவில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 7:00 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:41 PM

விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் குழித்துறையில் திருமண மண்பத்தில் மணமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் வி.எஸ். நந்தினி, கழுவன்திட்டை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா். குழித்துறை கல்பாலத்தடி இசக்கியம்மன் கோயில் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதை அறிந்த வேட்பாளா் நந்தினி, கட்சி நிா்வாகிகளுடன் சென்று மணமக்கள் மற்றும் அவா்களது உறவினா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் குழித்துறை நகர பாஜக தலைவா் விஜூ, குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் மினிகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement