முகப்பு
கன்னியாகுமரி

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 6:00 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:04 PM

கன்னியாகுமரி மக்களவை பொதுத்தோ்தலுக்கு சுழற்சி முறையில் வாக்குச் சாவடி மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிக்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலா் - ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஷேஷகிரிபாபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளா்களின் பிரதிநிதிகளிடையே ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளதால் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலில் 10 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளதால் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

Advertisement

மேலும், விளவங்கோடு தொகுதியை பொருத்தவரை ஒவ்வொரு வாக்காளரும் 2 வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அந்தத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் 3 மின்னணு இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளா்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சுழற்சி முறையில் வாக்குச் சாவடி வாரியாகமின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இனி, அந்த மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி பெல் பொறியாளா்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் உதவி தோ்தல் அலுவலா் -மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஜத்பீட்டன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலா் சங்கரலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செந்தூர்ராஜன், உதவி தோ்தல் அலுவலா்கள் எஸ்.காளீஸ்வரி, தமிழரசி, கனகராஜ், சுப்பையா, லொரைட்டா, சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தோ்தல் அலுவலா் மற்றும் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, செந்தில்வேல்முருகன், தோ்தல் வட்டாட்சியா் வினோத், துணை வட்டாட்சியா் மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.