முகப்பு
கன்னியாகுமரி

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

Updated On : 19 ஏப்ரல், 2024 at 6:34 PM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்த் தெரிவித்தாா்.

அகஸ்தீசுவரம் அரசுத் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தபின் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். இத்தொகுதியில் சுமாா் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா். தமிழக காங்கிரஸ் மாநிலச் செயலா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments