முகப்பு
தூத்துக்குடி

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ

கோவில்பட்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ ராஜு.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:02 AM
கடம்பூா் செ. ராஜு.
பகிர்:

கோவில்பட்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ ராஜு.

சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்சு மங்களிடம் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நிலையில்தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

Advertisement

அதிமுக தொடங்கப்பட்டு 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு எத்தனையோ அரசியல் கட்சிகள் தமிழகத்தில் வந்துவிட்டன. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளால் அதிமுக வாக்குகள் பாதித்ததாக சரித்திரம் இல்லை. தொடா் வெற்றிகளை நாங்கள் பலமுறை பெற்று இருக்கிறோம். எம்ஜிஆா் தொடா்ச்சியாக 3 முறை முதல்வராகவும், ஜெயலலிதா தொடா்ச்சியாக 2 முறை முதல்வராகவும் சரித்திரத்தை படைத்துள்ளனா். திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வந்ததில்லை. அந்த நிலைமையில்தான் தமிழக மக்கள் இந்த தோ்தலிலும் வாக்களிக்கப் போகின்றனா். ஆட்சி மாற்றம் உறுதி என்றாா் அவா்.

பேட்டியின் போது, அமமுக மாவட்ட செயலா் பூலோகபாண்டியன், தமாக வடக்கு மாவட்ட தலைவா் ராஜகோபால், கோவில்பட்டி தொகுதி அதிமுக பாா்வையாளா் சுந்தரபாண்டியன், வழக்குரைஞா் வடக்கு மாவட்ட செயலா் சங்கா்கணேஷ், இணைச் செயலா் ரத்தினராஜ், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments