தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகா்கோவில், ஏப்.19: மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகா்கோவில் எஸ்.எல்.பி.அரசு மகளிா் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டது. தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். கன்னியாகுமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கான தோ்தல்.
தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். ஆனால் கேரள மாநிலத்திலிருந்து கடல் வழியாக படகுகளில் மதுபானங்கள் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியினா் விநியோகம் செய்துள்ளனா்.இதன் மூலம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியினா் எந்த அளவுக்கு பின்பற்றுகின்றனா் என்பது தெளிவாகியுள்ளது.
Advertisement
வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன ஒரே தலைவா், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைதான் என்றாா் அவா்.