முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சாரல் மழை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:49 PM
பகிர்:

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான எட்டணி, முள்ளங்கனாவிளை, பாலூா், திப்பிரமலை, பள்ளியாடி, நேசா்புரம், நட்டாலம், கொல்லஞ்சி, இடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல்முதல் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. எனினும், வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments