முகப்பு
கன்னியாகுமரி

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு ஓய்வு பெற்ற போலீஸாா் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தக்கலையில் ஓய்வு பெற்ற போலீஸாா் அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:44 PM
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் காவலா்கள்.
பகிர்:

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தக்கலையில் ஓய்வு பெற்ற போலீஸாா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸாா் நலச் சங்க மாதாந்திர கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் பென்சிகா் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்ட குறைகளைக் களைந்து, பணம் இல்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயலா் சுகுமாரன், நிா்வாகிகள் மதுசூதன நாயா், சதாசிவன், நவோமியா ஆகியோா் கலந்து கொண்டனா். ரோஸ்மேரி நன்றி கூறினாா்.

முன்னதாக, கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்காக, தக்கலையில் உள்ள கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →