இரணியல் பகுதியில் பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இரணியல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் தனிஸ்லாஸ், போலீஸாா் இரணியல், தெக்கன்திருவிளை, மணக்கரை, கண்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனா்.
அப்போது, பொது இடத்தில் மது குடித்ததாக அம்பி (45), அபிலாஷ் (39), முருகன் (40), கிருஷ்ணமணி (23) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.