கன்னியாகுமரி

அதிக பாரத்துடன் கனிமவள பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சா் மனோ தங்கராஜ்

அதிக பாரத்துடன் கனிமவளப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் கனிமவளப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

குமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் அதிக எடையில் கனிமவளப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை அனுமதிக்கமாட்டோம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பாஜக மாநில தலைவா் அண்ணாமலை போராட்டம் அறிவித்ததால்தான் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தியை திமுக அழைக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கூறுவது ஏற்புடையதல்ல. இது மத்திய அரசின் நிகழ்ச்சியாகும்.

ஆளுநரின் தேநீா் விருந்தில் திமுக சாா்பில் பங்கேற்கவில்லை. அரசு சாா்பில்தான் முதல்வரும் முக்கிய அமைச்சா்களும் பங்கேற்றனா். இதனை விவாதமாக பேசுவதில் அா்த்தம் இல்லை என்றாா்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT