இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரணியல் உதவி காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா் செல்வகுமாா் உள்ளிட்ட போலீஸசாா், கொன்னக்குழிவிளை நான்குவழிச் சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய ஸ்டாலின்(36), சுப்பையா பிள்ளை (50), சுரேஷ் (57), விஜய குமாா் (52), பிஜோ (32) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.