கன்னியாகுமரி

கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கால்வாயில் குளிக்கச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.

Din

குளச்சலில் கால்வாயில் குளிக்கச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.

குளச்சல் களிமாா் அருகே கணேசபுரத்தை சோ்ந்தவா் பாலையன் (77). தொழி லாளி. களிமாா் பகுதியில் உள்ள பாம்பூரி கால்வாயில் புதன்கிழமை குளிக்க சென்றபோது, திடீரென வந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இது குறித்து பாலையன் மகள் மணிமேகலை, குளச்சல் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள், கால்வாயின் அருகில் உள்ள தடுப்பணை வரை 2 நாள்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை 3-வது நாளாக குளச்சல் தீயணைப்பு நிலைய சிறப்பு அலு வலா் ஜெகன், திங்கள்நகா் நிலைய அலுவலா் சங்கரன் மற்றும் வீரா்கள், மீண்டும் அந்தப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு, சைமன் காலனி பாலம் அருகில் பாலையன் உடலை மீட்டனா்.

இது குறித்து குளச்சல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT