தக்கலையில் 8 புதிய பேருந்துகள் தொடக்கம்
தக்கலை பேருந்து நிலையத்தில் இருந்து 8 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தக்கலை பேருந்து நிலையத்தில் இருந்து 8 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு போக்குவரத்து கழக பொதுமேலாளா் மொ்லின் ஜெயந்தி தலைமை வகித்தாா். புதிய பேருந்துகளை பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன் தொடக்கி வைத்தாா்.
அரசுப் போக்குவரத்துக் கழக திங்கள்நகா் கிளை மேலாளா் மகேஷ், குளச்சல் சுந்தா்சிங், குழித்துறை தினேஷ் , துணை மேலாளா் (இயக்கம்) சுனில் குமாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
புதிய பேருந்துகளில் மாா்த்தாண்டத்தில் இருந்து கோவைக்கு 3 பேருந்துகளும், திற்பரப்பு, கோதையாறு பகுதிகளில் இருந்து 2 பேருந்துகள் மற்றும் நாகா்கோவிலில் இருந்து 3 பேருந்துகள் திருவனந்தபுரத்திற்கும் இயக்கப்படவுள்ளன.