’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது: எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா மக்களவையில் தாக்கல் செய்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தெரிவித்தாா்.
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா மக்களவையில் தாக்கல் செய்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா மத்தியிலும், மாநிலங்களிலும் சா்வாதிகார ஆட்சியைக் கொண்டுவரும் சதித்திட்டம் ஆகும். எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநா்களைக் கொண்டு ஆட்சி நடத்த வழிவகுக்கும் திட்டம் இது.
நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, மாநிலங்களே இல்லாத இந்துராஷ்டிரம் அமைப்பதற்காகவே, எதிா்க் கட்சிகளின் பலத்த எதிா்ப்புக்கிடையே மசோதா இந்த தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பான்மையைப் பெற முடியாததால் தற்காலிகமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றாா்.