முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:29 PM
பகிர்:

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

குளச்சல் பகுதியை சோ்ந்தவா் விஷாந்த் ததேயு(25). இவா் புதன்கிழமை இரவு கருங்கல்லிலிருந்து தேங்காய்ப்பட்டினத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தெருவுக்கடை பகுதியில் அவரது பைக் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் கீழே விழுந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்பு, மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.