கொடி மரத்துக்கு நடத்தப்பட்ட சிறப்பு தீபாராதனை 
கன்னியாகுமரி

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா வியாழக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

நாகர்கோவில்: நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா வியாழக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று விடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலும் ஒன்றாகும்.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை (பிப்.15) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தை தந்திரி கே.ஜி.எஸ்.மணி நம்பியார் நடத்தினார்.

இதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து கொடி மரத்துக்கு பால்,பன்னீர்,கம்பம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது.

அழகம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கொடியேற்றம்

ஓதுவார் ஆர்.செல்வமணி தேவார திருமுறைகள் ஓதினார்.கொடியேற்று நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன்,நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் அட்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியன், அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை தலைவர் நாகராஜன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் உறுப்பினர்

சீனு, ஆர்.எம்.கே.சுப்பிரமணியன், அதிமுக நாகர்கோவில் பகுதி செயலாளர் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9 ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை(பிப்.23) நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT