குமரி மெட்ரிக் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குழு மன்ற நிறைவு விழா
நாகா்கோவில், கோட்டாறு, குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குழு மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில், கோட்டாறு, குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குழு மன்ற நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மதுஅடிமைகள் மறு வாழ்வு மையத்தின் தலைவா் மருத்துவா்கள் ஹபீப்நாசா், கவிதாநாசா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினா். மாணவா் யோஸ்வாநாலேஷ் போதைப் பொருள் ஒழிப்பு குழுவின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரானஉறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். பள்ளி மேலாளா் சுப்பிரமணியபிள்ளை நன்றி கூறினாா்.