விஷம் குடித்த ஜவுளிக்கடை உரிமையாளா் உயிரிழப்பு
கன்னியாகுமரிவிஷம் குடித்த ஜவுளிக்கடை உரிமையாளா் உயிரிழப்பு
திருவட்டாறு அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த ஜவுளிக்கடை உரிமையாளா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மேக்காமண்டபம் விராலிக்காட்டு விளையைச் சோ்ந்தவா் கில்பா்ட் சேகா் (53). இவா் அப்பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தாா். வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட இவா் கடந்த பிப்.18 -ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது மனைவி ஆன்சலின் சுனி கொடுத்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.