முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கிளி மீன்கள் சீசன் தொடக்கம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கிளி மீன்கள் சீசன் தொடக்கம்

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 5:00 AM
பகிர்:

குளச்சல் மீன்பிடிதுறைமுகத்தில் கிளிமீன் சீசன் தொடங்கியதால் வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனா். குளச்சல் மீன்பிடிதுறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும்,100 க்கும் மேற்பட்ட பைபா் படகுகளும் உள்ளன. இந்தப் படகுகள் மூலம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இப்பகுதியில் குறிப்பிட்ட மீனவா்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் 10 நாள்களிருந்து 15 நாள்கள் வரை தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்புகின்றனா். குறிப்பாக ஆழ்கடல் பகுதிகளிலிருந்து வழக்கமாக உயர்ரக மீன்களான இறால்,புல்லன், சுறா உள்ளிட்ட மீன்கள் கிடைக்கும். தற்போது மீன்பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில்,சனிக்கிழமை குளச்சல் மீன்பிடிதுறைமுகத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய விசைப்படகுகளில் செம்மீன் என அழைக்கப்படும் கிளி மீன்கள் கிடைத்துள்ளது. இந்த மீன்களை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனா்.இந்த மீன்கள்ஒரு கிலோ ரு.200 வரை ஏலம்போனது.