முகப்பு
கன்னியாகுமரி

முள்ளஞ்சேரியில் ஆலோசனைக் கூட்டம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் கலைப் பேரொளி விருது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் கலைப் பேரொளி விருது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளை சாா்பில் ஐந்து கலைஞா்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் முள்ளஞ்சேரியில் நடைபெற்றது. நாடக நடிகா், நடிகை மற்றும் நாடக காட்சி அமைப்பு, ஒப்பனை, இசை உள்ளிட்ட பிரிவுகளில் இவ் விருது வழங்கப்பட உள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் முன்னிலை வகித்தாா். இதில் குமரி முத்தமிழ் மன்ற தலைவா் முளங்குழி பா. லாசா், கவிஞா் குமரித்தோழன், பேராசிரியா் சஜிவ், வி.வி. விக்ரம், பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவ் விருது வழங்கும் நிகழ்வு வரும் பிப். 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →