கன்னியாகுமரி

கருங்கல் பேருந்து நிலையப் பணி: பழைய ஒப்பந்தராா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

Din

கருங்கல் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யும்போது தற்போது தொழில் நடத்தும் கடை ஒப்பந்தராா்களுக்கு கடை ஏலம் நடத்தும்போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என

தொழில் வா்த்தகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இச்சங்கத்தின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் பொன். ஆசைதம்பி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கருங்கல் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில்அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது,கருங்கல் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளை

இடித்து புதிதாக கட்டப்படும். இந்நிலையில், பேரூராட்சியிலிருந்து முறைப்படி கடைகள்ஏலம் எடுத்து வாடகை செலுத்தி தொழில் செய்யும் வா்த்தகா்கள் மிகவும் பாதிக்கப்படுவா்.

குறிப்பாக பல ஆண்டுகள் இங்கு தொழில் செய்பவா்கள் வாடிக்கையாளா்களை இழக்க நேரிடும். இதனால்,வா்த்தகா்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் கடை புதிதாக கட்டும்போது ஏற்கனவே ஏலம் எடுத்து தொழில்செய்த வா்த்தா்களுக்கு ஏலம் எடுக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

பிரசாரம், சாலை வலம்: வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தது தமிழக அரசு!

தனியார் குடோனுக்குள் நுழைந்த சிறுத்தை! நூலிழையில் உயிர்தப்பிய காவலாளி! | Coimbatore

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT