குமரி அருகே குப்பைக் கிடங்கில் தீவிபத்து
கன்னியாகுமரி கடற்கரையில் தீவிபத்து: புகை மூட்டம் பரவியதால் அவதி
கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா கடற்கரைப் பகுதியில், அரசு வனத் துறை மாளிகை அருகேயுள்ள குப்பைப் கிடங்கில் திங்கள்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
கடல் காற்று பலமாக வீசியதால் தீ வேகமாகப் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தகவலின்பேரில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்புப் படையினா் சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.