முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் குறித்து...

Updated On : 25 பிப்ரவரி 2026, 1:30 pm IST
முதல்வர் ஸ்டாலின் - படம்: DIPR
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 24) கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.

இன்று (பிப். 25) காலை நாகர்கோவில், கன்கார்டியா பள்ளி திடலில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கலந்துகொண்டு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றினார்.

Advertisement

Advertisement

அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

* குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய, பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ. 28.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் தொடங்கப்படும், முக்கடல் சந்திக்கும் இடத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.

* குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சியில் AVM கால்வாய் ரூ. 1.20 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

* களியக்காவிளை - கன்னியாகுமரி சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ரூ. 9 கோடியில் சாலைகள் அகலப்படுத்தப்படும்.

*கல்குளம் வட்டம் முளகுமூடு பகுதியில் உள்ள தூய மரியன்னை தேவாலயம் ரூ. 2 கோடி செலவில் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்.

மீனவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற கல்வி, திருமண உதவித் தொகைகள் உள்ளிட்டவை அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும்.

கடலில் மீன் பிடிக்கும்போது, மீனவர்கள் காணாமல் போகும் நேரத்தில் காப்பீடு, நிவாரணங்கள் கிடைக்கும் வரை, அவரது வாரிசுகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

summary

Chief Minister Stalin has issued 6 new announcements for Kanyakumari district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments