FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியது பற்றி...

Updated On : 15 ஜூலை 2026, 11:00 am IST
பெரியாருடன் காமராஜர் மற்றும் கருணாநிதி - படம்: எக்ஸ் / மு.க. ஸ்டாலின்
பகிர்:

நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர் காமராஜர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் உள்பட பல தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!

மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.

பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.

உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.

காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவரது வழியிலான நமது திராவிட மாடல் அரசிலும், காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை, திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசரின் பெயர் எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!

தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

He stood by Kalaignar during the Emergency! Stalin heaps praise on Kamaraj!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments