முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தார்.

Updated On : 15 ஜூலை, 2024 at 10:18 PM
பகிர்:

கருங்கல்: கருங்கல் அருகே கிள்ளியூா் பகுதியில் மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தீப் (45). திருமணமாகவில்லை. இவா், திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள மா மரத்தில் ஏறினாராம். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →