முகப்பு
கன்னியாகுமரி

குமரி மெட்ரிக் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:33 PM
போட்டியில் பங்கேற்றுப் பேசிய மாணவா். உடன், தாளாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா்.
பகிர்:

நாகா்கோவில்: நாகா்கோவில் கோட்டாறு, குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளிக் குழு உறுப்பினா் சிவகாமி சொக்கலிங்கம் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா். காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசு, சான்றிதழ், கேடயங்களை பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் வழங்கினாா்.

காமராஜா் குறித்து ஆசிரியா்கள் பேசினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் பிரதீஷ், செல்வி, ஹசீனா, ஹரிகணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →