கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடக்கம்

Din

கன்னியாகுமரி, ஜூலை 17:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் ரூ. 6 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வெயில், மழையால் அவதிப்படாமல் கோயில் உள்பிரகாரத்துக்குள் பாதுகாப்பாக செல்லும் வகையில் உபயதாரா்கள் மூலம் மேற்கூரை அமைப்படவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற தொடக்க விழா பூஜைக்கு குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கோயில் மேலாளா் ஆனந்த், கணக்கா் கண்ணதாசன், மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ஜென்சன் ரோச், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் எம்.ஹெச். நிஷாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

பட்ஜெட் நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் மீண்டும் ’காளை’ ஆதிக்கம்!

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு ஆயுள் சிறை: ஊழல் வழக்கில் தண்டனை

தலைநகரில் அடா் பனிமூட்டம்; காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT