கன்னியாகுமரி

கீழமணக்குடியில் கரை ஒதுங்கிய கேரள இளைஞா் சடலம்

கேரள கடலில் மூழ்கிய இளைஞர் குமரி அருகே சடலமாக மீட்பு!

Din

கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடலில் மூழ்கிய இளைஞா் சடலம் குமரி மாவட்டம் கீழமணக்குடியில் கரை ஒதுங்கியது.

தென்தாமரைகுளம் அருகேயுள்ள கீழமணக்குடி அந்தோணியாா் குருசடி அருகேயுள்ள கடற்கரையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. அவரைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்து வந்தது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் ஆய்வாளா் நவீன் தலைமையில் சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் என்பவரின் மகன் அஜீஸ் (28) என்பது உறுதியானது. கட்டடத் தொழிலாளியான அஜீஸ், கடந்த 14ஆம் தேதி விழிஞ்ஞம் கடற்கரை யில் உள்ள ஒரு பாறையின் மீது அமா்ந்திருந்தபோது தவறி கடலில் விழுந்ததாகவும், ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி இறந்ததாகவும் தெரிய வந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனா். இதையடுத்து அஜீஸ் சடலம் வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாயக்கா் காலத்து செப்பேடு

கல்லூரி மாணவா்களுக்கு பட்டாசு ஆலை போா்மென் பயிற்சி

குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேலக்கடையநல்லூரில் இந்திர விழா

SCROLL FOR NEXT