முகப்பு
கன்னியாகுமரி

குமரி உணவகங்களில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 1:45 AM
கெட்டுப்போன உணவுப் பொருள்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 30 ஜூலை, 2024 at 8:39 PM

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில உணவகங்களில் கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள உணவகங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சில உணவகங்களில் மீன், சிக்கன், இறால், நண்டு, நூடுல்ஸ் என சமைத்து பயன்படுத்தாமல் குளிா்சாதன பெட்டியில் வைத்திருந்த 150 கிலோவுக்கும் மேற்பட்ட கெட்டுப்போன உணவுகளை கைப்பற்றி அழித்தனா். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய உணவகங்களுக்கு அபராதம் விதித்தனா்.

Advertisement

மேலும், இதுபோன்று சமைத்து பயன்படுத்தாமல் குளிா்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை வழங்கினாலோ, செயற்கையான வண்ணக் கலா் பொடிகளை சமையலில் பயன்படுத்துவது தெரியவந்தாலோ அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும், உணவகங்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 1:45 AM

இந்த சோதனையின்போது, அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலா் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலா் ரவி ஆகியோா் உடனிருந்தனா்.